top of page

The Kreutzer Sonata: கொலையின் நறுமணம்

Sep 10
5 min read

துயர் நிரம்பிய மனித மனம் பதில்களே இல்லாதஎண்ணுக்கணக்கற்ற கேள்விகளால் நிறைந்ததது.அந்தக்கேள்விகளுக்கு பதில் தேடிச்செல்கின்றபோதுஇன்னும் குழப்பமான சிக்கல்களுக்கு மனதைபறிகொடுப்பது அநேகரது அனுபவம். புதில்தேடும்ஆழ்துளைப்பயணங்களில் மனிதன் ஏதோவொருபுள்ளியில் தான் தேடிய விடுதலையை - மகிழ்ச்சியை - சிலவேளைகளில் குழப்பத்திற்கான வேர்களைகண்டடைகிறான். அந்த விடுதலையை அருளக்கூடியஅந்தரங்கம் அநேக தருணங்களில் அச்சம்தரக்கூடியது.பிரகாசம் குறைந்தது. ஆனால், உண்மையானது.உருவகங்களிலிருந்து துலக்கி தூய பொருளைமுன்வைக்கக்கூடியது.


 

இவ்வாறு அகத்துக்கும் புறத்துக்குமான போராட்டத்தை - புதுமைக்கும் பழமைக்குமான வேறுபாட்டை - நன்மைக்கும்தீமைக்குமான முரண்பாட்டினை இவை அனைத்தையும்ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனித அகங்காரத்தைதர்க்கபூர்வமாக தரிசனமளித்ததன் மூலம்மானுடகுலத்துக்கே தன் எழுத்துக்களினால்சிகிச்சையளித்தவர் லியோ டோல்ஸ்டோய்.

 

டோல்ஸ்டோய் தன் எழுத்துக்களில் அடைந்த உச்சமும்படைப்பூக்கத்தில் கண்டுகொண்ட ஞானமும்இலக்கியத்தில் காலத்துக்கும் வற்றாத பெருநதியைதந்தது.

 

டோஸ்டோயின் இந்த படைப்பூக்க உச்சநிலையில் அவரதுதனிப்பட்ட வாழ்வியல் போராட்டங்கள் பெருமளவில்செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. முடிவுறாதசிக்கல்களுடன் அவர் அனுபவித்த அகவலிகள்பெருவீச்சுடைய படைப்புக்களாக தோன்றியிருக்கின்றன.தனது காயங்களை மேலும் வலி தரக்கூடியவையாகவும்அதேவேளை சிகிச்சையளிப்பவையாகவும்கூட தனதுஎழுத்துக்களினால் டோல்ஸ்டாய் மாற்றி மாற்றிபயணித்திருக்கிறார். தன்னை கண்டடைவதற்கானதேடல்மிகுந்த ஆன்மீக பயணங்களாக முற்றிலும்மாறுபட்ட டோல்டோயை முன்னிறுத்தி பலதடவைகள்அதிர்ச்சியளித்திருக்கிறார்.

 

இந்த அக – புற எழுச்சியையும் வீழ்ச்சியையும் உலகமேஅதிர்ச்சியடையும் வகையில் டோல்ஸ்டாயினால்எழுதப்பட்ட நாவல் The Kreutzer Sonata.

 

The Kreutzer Sonata நாவலை எழுதியபின்னர் அவரேமறுக்குமளவுக்கு – எழுதியதற்கு பொறுப்பேற்பதற்குபின்னடிக்குமளவுக்கு அது இலக்கியத்தில் பேரதிர்வைஏற்படுத்தியது.

 

டோல்ஸ்டோயின் ஆரம்பகால எழுத்துக்கள் எவ்வாறுஅன்பையும் தியாகத்தையும் வாழ்வின் மீதான கனிவையும்மெய்ஞானத்தையும் பிரகாசமான பயணங்களுக்கானவழிகளையும் திசை காட்டியதோ, அதுபோல அவரதுகடைசிகால கட்டம் மிகுந்த குழப்பங்கள் நிறைந்தவாழ்வியல் தரிசனங்களை முன்வைத்திருக்கிறது.வெறுப்பிலிருந்து தெறித்த எண்ணங்களினால்திரண்டிருக்கிறது. அன்பின் உச்சம் வன்முறைதான்என்பதுபோன்ற அரைமிருக தத்துவங்களைபகிர்ந்திருக்கிறது.

 

அவ்வகையானதொரு துயர்திளைப்பே நாவல் The Kreutzer Sonata.


 

அன்னா கரினீனா என்ற வடிவமைதிகொண்ட தனதுபடைப்பில் எவ்வாறு காதலை மையமாகக்கொண்ட ஒருபெண்ணின் அக உலகினை உணர்ச்சி சித்திரமாகடோல்ஸ்டோய் நேர்த்தியாக வரைந்திருந்தாரோ –

 

The Kreutzer Sonata நாவலில் ஒரு ஆணின்மனப்போராட்டத்தை – குற்றவுணர்ச்சியில் தத்தளிக்கின்றஆண்மன உலகத்தினை – குறுக்குவெட்டாககாண்பித்திருக்கிறார்.

 

மனைவியை கொலைசெய்த ஒருவன் ரயில்உரையாடலொன்றில் தனது குற்றத்துக்கானநியாயங்களை முன்வைப்பததோடு ஆரம்பிக்கின்ற இந்தநாவல், ஒரு ஆணின் தரப்பில் மறுக்கப்பட்ட நியாயங்களைகொந்தொளிப்போடு எழுதுகிறது. தனதுகுற்றங்களுக்கான நியாயங்களை அடுக்கிச்செல்கிறது. பலஅகால விதிகளை முன்வைத்து அவற்றை தர்க்கபூர்வமாகநியாயப்படுத்த முயற்சிக்கின்றது.

 

The Kreutzer Sonata நாவலை டோல்ஸ்டோய் எழுதியகாலப்பகுதியில், அதனையொட்டிய சம்பவங்கள்அக்காலத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாமேதவிர, இன்று அந்த வாழ்வின் வழியாக பலர் இடர்களின்றிமூழ்கி எழுந்து மீண்டுகொள்கிறார்கள்.

 

ஆனால், இன்றும் The Kreutzer Sonata நாவல்டோல்ஸ்டாயின் முக்கிய பிரதிகளில் ஒன்றாகமுன்நிறுத்தப்படுவதற்கு காரணம், டோல்ஸ்டாயின்முரண்பட்ட படைப்பு மனதின் வழியாக இந்தப்பிரதிபிரசவமானதுதான். கூடவே, அறியப்படாதடோல்ஸ்டோயின் ஆண் உலகத்தின்கறுப்புக்காரணங்களை அறிவதற்கும் இந்த நாவல்உசாத்துணையாகியிருக்கிறது.

 

The Kreutzer Sonata நாவல் டோல்ஸ்டாயின் வாழ்வைமாத்திரமல்ல, அவரது வாசகர்களையும்அதிர்ச்சிக்குள்ளாக்கிய படைப்பு. இந்த நாவல்வெளிவந்தபோது ரஷ்ய அரசும் அமெரிக்காலும் இதனைதடைசெய்தன.

 

கொலையை நியாயப்படுத்தும் பிரதி என்பதற்கு அப்பால், பிரம்மச்சாரியத்துக்கான பேராதரவுக்குரலை பெருங்குரலெடுத்துக்கூவும் இந்தப்படைப்பு, நவீனகுடும்பமுறைமைகளுக்கும் நாகரீகமடைந்துவரும் சமூகசட்டகங்களுக்கும் எதிரானது என்று வாதிடப்பட்டது.

 

வயதில் இளைய பெண்ணை திருமணம்செய்துகொள்கின்ற Pozdnyshev என்ற கதாபாத்திரத்திற்குகாமமே மூச்சு. காமமே வாழ்வு. காமமே தவம். காமமே வாழ்வின் வரம். பெண் என்ற உயிரினம் ஒன்றுதான் ஆணின் காமத்துக்கான ஒற்றைத்தீர்வாகசிருஷ்டிக்கப்பட்டிருக்கும்போது, அதனை அவள்தான் எத்துயர் நேரினும் தரவேண்டும் என்பது டோல்ஸ்டோயின்பாத்திரம் முன்வைக்கின்ற வாதம்.

 

இது கிட்டத்தட்ட அன்னா கரீனினாவில் அன்னாவின்காதலோடு அருகாக வைத்து ஒப்பீடு செய்யக்கூடியது.அங்கு அன்னா தனது காதலை இவ்வாறு ஓர்மத்தோடுமுன்னிறுத்துகிறாள். திருமணம் என்ற உறவுக்குத்தான்காதல் சொந்தமானதா என்பதை சோதனை செய்வதற்காகஅன்னாவின் மனம்கொள்ளும் துணிச்சல்விரான்ஸ்கியுடனான பயணத்துக்குள் நுழைகிறது.அந்தக்காதலுக்காக வாழ்வில் எவ்வளவு விலைகொடுப்பதற்கும் அன்னா தயாராகிறாள்.

 

ஆனால், கணவர் கரீனினாவினால் ஈற்றில் அவள் தீராதகுற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள். திருமணத்திலிருந்து வெளியேறி, கரீனினாவின் பெயருக்கு தீராதகளங்கத்தினை ஏற்படுத்தி, ஓடிச்சென்றவனுடன்குழந்தையை பெற்றுக்கொண்டு, அந்த நகரத்தில் யாருமேஅருகில் அமர்வதற்குக்கூட விரும்பாத – நடத்தைகெட்டவளாக – முத்திரை குத்தப்படுகின்றபோதும், அவளை கரீனினா மன்னிப்பதுதான், அன்னாவினால்ஏற்றுக்கொள்ளவே பெருஞ்சுழலில் தள்ளிவிடுகிறது.அதனை ஜீரணிப்பதற்கு, கரீனினாவினால் தான்அடைகின்ற குற்ற உணர்ச்சியிலும் பார்க்க பல மடங்குகாதலை விரான்ஸ்கியிடம் எதிர்பார்க்கிறாள்.அதனைத்தரக்கூடிய தகுதியுடன்தான் இருக்கிறானா என்றுஅடிக்கடி சோதித்துப்பார்க்கிறாள். அதில் அவளுக்கானதிருப்தி கிட்டவில்லை. ஒருபக்கம், காதலினால்ஏமாற்றப்படுவதாக முடிவெடுக்கின்ற அதேவேளை, மறுபக்கம் தனது கணவனின் மன்னிப்பு என்றபெருங்கொடுமையினால் ஆழரணப்படுகிறாள். இறுதியில், தான் அனுபவிக்கும் குற்றஉணர்வினை மேவுகின்ற ஒருகாதலை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில்ரயில்சில்லுகளுக்குள் தன்னை எறிந்துமாய்த்துக்கொள்கிறாள்.

 

இதில் டோல்ஸ்டோய் ஆழச்சென்று நுட்பமாகவிவரித்திருக்கும் பெண் மனதுக்கும் The Kreutzer Sonata நாவலில் உள்ள ஆணின் உலகத்துக்கும் இடையில்நிறைய ஒற்றுமைகளை காணலாம்.


 

பெண் எப்போதும் தனது காதலை ஆணின் காதலைவிடஒப்பற்றதாக எண்ணுபவள். தனது காதலை ஆணால்எப்போதுமே சமன்செய்யமுடியாது என்ற உறுதியான முடிவுஎல்லாப்பெண்களுக்குள்ளேயும் உள்ளது. விகிதாசாரங்கள்வேறுபடலாமே தவிர, ஆனால் விதியில் ஒருபோதும்மாறுதல் நிகழ்வதில்லை. தங்கள் காதலை ஒரு ஆண்மேவிச்செல்வதற்கு செய்யும் எத்தனிப்புக்களை பெண்கள்ரசிப்பார்களே தவிர, அனுபவிப்பதில்லை. அவர்கள்எப்போதும் ஆத்மார்த்தமாக அனுபவிப்பதும்கொண்டாடுவதும் தங்களது காதலைத்தான். அதற்கானஒத்துழைப்பினைத்தான் ஆண்களிடம் அவர்கள்எதிர்பார்க்கிறார்கள். அந்த ஒத்துழைப்பினை அவர்கள்கொண்டாடுகிறார்கள். இது ஒருவகையில், இயல்பானபெண்மனம்.

 

ஆனால், பெண்களின் காதலை விஞ்சிவிடுவதில்லை என்றஇழப்பு, ஆண்களுக்கு ஒருபோதும் குற்றஉணர்வினைஏற்படுத்துவதில்லை. வாழ்வில் தீராதஅகப்போராட்டத்துக்குள் தள்ளிவிடுவதில்லை. மனங்களில்உபவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆண்களுக்குஇந்தப்போராட்டம் எங்கு இடம்பெறுகிறது என்றுநுணுக்கமாக நோக்கினால், அது காமத்தில்தான்வெடிக்கிறது.

 

The Kreutzer Sonata நாவலில் காதலுக்கும் காமத்துக்கும்வழங்கப்படுகின்ற விளக்கங்களில் தனதுகதாபாத்திரங்களின் வழியாக இந்த மையவலியைடோல்ஸ்டாய் மிக நுட்பமாக முன்வைக்கிறார்.

 

தன்னை திருணம் செய்துகொள்கின்றவளிள் இளவயதுகனவுகள் குறித்து கதாநாயகனுக்கு எந்த கரிசனையும்இல்லை. அவளின் எதிர்பார்ப்பில் எந்தக்களிப்பும் இல்லை.தனது காமத்தினை அவளில் ஏவி தீர்த்துக்கொள்வதில்தான்சதா செயல்கொள்கிறான். ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொள்கின்ற நாயகியின் உடல் இனிகுழந்தைபெற்றுக்கொள்ளும் ஆரோக்கியத்துடன் இல்லைஎன்று மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்ட பின்னர், அவள்கருத்துடை மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிக்கிறாள்.

 

கவலைகளை – மன அழுத்தங்களை – கண்ணீரை என்றுஎல்லாவற்றுக்குமான காரணங்களை தொடர்ந்தும்மறைத்துவந்த தனது மனைவி தற்போது, கருத்தடைமாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிப்பதது, ஏதோவொருவகையில் தனது காமத்துக்கு போடுகின்ற தடையென்று Pozdnyshev எண்ணுகிறான். அவளது ஊமை யுத்தத்தினால்கடும் சீற்றத்துக்குள்ளாகிறான். பெண்ணுக்கானவரையறைகளாக தான் எதிர்பார்க்கும் எல்லைகளிற்குவெளியே தன்னை ஏமாற்றிக்கொண்டு அவள்சென்றுவருவதாக Pozdnyshev நம்புகிறான். அவளதுஇருப்பு ஆண் என்ற தனது ஆற்றலுக்கே சவால்விடுவதாககொதிக்கிறான்.

 

அதற்கான காரணங்களை அவளுக்குள் தேடுகின்றபோது, தனது நண்பனொருவுடன் அவள் வயலின் பழகுவதும்தத்துவம் - இசையென்று எந்நேரமும் பேசுவதும் அவளைவெறுப்பதற்கான வாய்ப்புக்களாக அவனுக்குகிடைக்கிறது. தனது மனைவியின் மீதான கோபம்கொலைவெறியாக மாறுகிறது. அவளை முற்றாகவெறுக்கிறான். அவளை வெறுமனே நிராகரித்து, இவ்வுலகில் வாழ அனுமதிப்பதிலும் பார்க்க, கொலைசெய்வதே உரிய தீர்வென்று எண்ணுகிறான்.இறுதியில், Pozdnyshev அவளை கூர்வாளினால் குத்திகொலைசெய்கிறான்.

 

அந்தக்கொலையைக்கூட Pozdnyshev மிக நிதானமாகநிகழ்த்துகிறான். உணர்வுமேலீட்டினால் - சுயநினைவுதடுமாறிய நிலையில் - சம்பிரதாயமாக கூறப்படும்காரணங்களுக்குள் - தனது நாயகனை டோல்ஸ்டோய்மறைக்கவில்லை. தனது மனைவி இந்த உலகத்தில்வாழ்வதற்கும் எந்த தகுதியமற்றவளாக தன்னால்தீர்மானிக்கப்படுகின்றபோது, அவளை தான்இவ்வுலகிலிருந்து அகற்றுவதற்கு பூரண சுதந்திரமும்நியாயமும் உண்டென்பதை பரிபூரணமாகஉணர்ந்துகொண்டுதான் அந்தக்கொலையை செய்கிறான்.

 

“When people say that they do not remember what they do in a fit of fury, they talk nonsense. It is false. I remember everything. I did not lose my consciousness for a single moment. The more I lashed myself to fury, the clearer my mind became, and I could not help seeing what I did. I cannot say that I knew in advance what I would do, but at the moment when I acted, and it seems to me even a little before, I knew what I was doing, as if to make it possible to repent, and to be able to say later that I could have stopped.”

 

கொலையின் பிறகு டோல்ஸ்டோய் கூறும் நியாயங்கள் - காரணங்கள் போன்றவை இரண்டாம் கேள்விக்குஇடமின்றி நிராகரிக்கப்படவேண்டியவை என்றாலும், அவரது கேள்விகள் சமூகத்தின் பாரம்பரியமான குறைவிளக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள், தீராத்தவறுகள்ஆகியவற்றின் கழுத்தை நெருக்குபவையாக அமைகின்றன.

 

அன்பு – காதல் என்பவற்றிற்கு சமூகம் எழுதிவைத்திருக்கும் விதிகளையும் அவற்றின் உண்மையானஅர்த்தமாக பாவனைசெய்துகொள்ளும் படிமுறைகளையும்டோல்டோய் அடியோடு நிராகரிக்கிறார். காதலைபுரிந்துகொள்வதற்கு முன்னரே – அதன் அர்த்த்தினைஅனுபவிப்பதற்கு முன்னரே – கவித்துவமாக அதனைஎழுத்துக்களில் முன்னிறுத்தியும் கற்பனைகளின் வழியாகஅதனை நம்பவைப்பதிலும் சமூகம் வெற்றிகண்டுவிட்டது.ஆகவே, காதலின் நிகருணர்வை அனுபவிப்பவனையும்அதன் விழுமியங்களை கொண்டாடுபவனையும் சமூகம்வெளியே நிறுத்திவிடுகிறது என்கிறார்.

 

திருமணதிற்கான முக்கிய முதலீடு காதல்தான் என்றுசமூகம் கட்டிவைத்திருக்கும் அபத்தத்தினை டோஸ்டோய்The Kreutzer Sonata நாவலில் ஊதியெறிகிறார். ஆணும்பெண்ணும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டால், அவர்கள் காதலுடன்தான் வாழ்கிறார்கள் என்றொருபெருங்கேவலமான சமன்பாட்டினை இந்த சமூகம்தொடர்ந்து சமைத்து சமைத்து தலைமுறைதலைமுறையாக கடத்திவருவதை வெறுப்புடன்நிராகரிக்கிறார்.

 

அன்பையும் வெறுப்பையும் தத்துவரீதியாக சரிவரப்புரிந்துகொள்ளமுடியாத சமூகம். குழப்பங்களுக்குபுதைந்துகிடந்து வதைபடுகிறது என்கிறார். அதைஎழுதும்போது இப்படிச்சொல்கிறார் -

 

“period of intense love was followed by a long period of anger; a period of mild love induced a mild irritation. We did not understand that this love and this hatred were two opposite faces of the same animal feeling. To live thus would be terrible, if one understood the philosophy of it. But we did not perceive this, we did not analyze it. It is at once the torture and the relief of man that, when he lives irregularly, he can cherish illusions as to the miseries of his situation. So did we.”

 

இதன் வழியாக பெண்களின் அன்பு மீதும் காதல் மீதும்நாவல் முழுவதிலும் மூர்க்கமான விமர்சனங்களைமுன்வைக்கிறார். பெண்கள் தங்களது தெரிவுகளை அதிகமாக்கிக்கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காக, பல எண்ணிக்கையிலான ஆண்களை கவரமுயற்சிக்கிறார்கள், எல்லா பெண்களினதும் ஒற்றைநோக்கம் அதுவே என்கிறார். அந்தத்தெரிவுதான் தங்களதுகணவரை ஆள்வதற்கான ஆற்றலை வாழ்நாள் முழுவதும்வழங்குவதாக பெண்கள் நம்புவதாக டோல்ஸ்டோய்குறிப்பிடுகிறார்.

 

“since to them the attraction of the greatest number of men is the ideal of life (young girls and married women), and it is for this reason that they have no feeling stronger than that of the animal need of every female who tries to attract the largest number of males in order to increase the opportunities for choice. So it is in the life of young girls, and so it continues during marriage. In the life of young girls it is necessary in order to selection, and in marriage it is necessary in order to rule the husband.”

 

தனது அன்புக்கு நிறைவானவளாக இல்லை என்றவெறுப்பின் உச்சத்தினால் மனைவியை படுகொலை செய்தஒரு ஆணின் நியாயங்கள் எவ்வளவு பெறுமதியானது என்றகேள்வி இங்கு எழுந்தாலும், பெண்கள் மீதானடோல்ஸ்டோயின் வெறுப்பு அவரது எல்லா பிரதிகளிலும்அரூபமானது.

 

இந்த இடத்தில், அன்னா கரீனினாவையும் The Kreutzer Sonata நாவலையும் சமாந்தரமாக வைத்துப்பார்க்கும்போது, டோல்ஸ்டோயின் ஆழ்மனதில் பெண்களின் மீதானதீராதவெறுப்பு கொதிநதியாக ஓடிக்கொண்டிருப்பதைஅவதானிக்கலாம்.

 

அதற்கு காரணங்கள் அவரிடம் இல்லாமலும் இல்லை.அவரது தனிப்பட்ட வாழ்வில், மனைவி சோபியாவைடோல்ஸ்டோய் படிப்படியாக முழுமனதோடு வெறுத்தார்.கடைசிகாலம்வரைக்கும் அவருக்கு காமம்பெருந்தேவையாக இருந்துகொண்டேயிருந்தது. இருந்தாலும், சோபியாவின் படோபாகார குடும்பப்பின்னணியையும் அதன்வழியான அவரது அரசியல்- இலக்கிய அணுகுமுறைகளையும் - டோல்ஸ்டோய் பரிபூரணமாக வெறுத்தார். அவர் இறக்கும் தறுவாயில்கூட, சோபியாவை - முதலில் - பார்க்க விரும்பவில்லை.

 

டோல்ஸ்டோய் தொடர்பான வரலாற்று பார்வைகள் பலவிதமானவை. நாடுகள் சார்ந்து, படைப்பாளிகள் சார்ந்து, திரிபுகள் சார்ந்து பல அரசியல் நிறைந்தவை. சோபியாவைடோல்ஸ்டோயின் கேடுகெட்ட மனைவியாக சித்தரித்துஅந்தப்புனைவை காலத்தின் கைகளில் ஒப்படைத்தவர்செக்கோவ்தான் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை உள்ளது.அதேவேளை, அன்னா கரீனினாவிலும் போரும்சமாதானத்திலும் சோபியாவை நாயகியாக உருவகித்துஉருகிய டோல்ஸ்டோய், கடைசிகாலத்தில் எழுதியநாவலுக்கும் சோபியாவையே நாயகியாக உருவகித்தார்.மொத்தத்தில், சோபியாதான் அவருக்கு எப்போதும்படைப்புலக நாயகியாகவே தேவைப்பட்டார் என்றஎதிர்க்குரல்களும் உண்டு.

 

ஆனால், டோல்ஸ்டோயினுள் நிகழ்ந்துகொண்டிருந்தஇந்த கடுமையான அலைக்கழிப்பும் - கேள்விகளும் - கோபமும்தான் - போராட்டமும்தான் புற உலகில், பெருவீச்சான பாத்திரங்களையும் அவற்றின்உணர்வுகளையும் நுட்பமாக உருவாக்கியது.

 

The Kreutzer Sonata நாவல் வெளிவந்தபோது, டோல்ஸ்டோயின் மனைவி மீதுதான் எல்லோரும்கரிசனையடைந்தார்கள். டோல்ஸ்டோய் தனதுசொந்தக்கதையைத்தான் எழுதியிருக்கிறார் என்றுதிகைத்துப்போய் சோபியாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.ஆனால், இந்த ஆறுதல்களினால் சோபியா பதறினார்.தனது தரப்பினை சொல்லமுடியாத நிலையில், டோல்ஸ்டாயினால் இலக்கிய உலகம்நம்பவைக்கப்பட்டிப்பதை கண்டு உடைந்தார்.

 

நாவல் தன்னைப்பற்றியது அல்ல என்பதைஉறுதிசெய்வதற்கு, அதன் மீதான தடையை நீக்குவதேஓரளவுக்காவது உகந்த வழியாக இருக்கமுடியும் என்றுரஷ்ய மன்னரிடம் கோரிக்கை வைத்தார். நாவல் மீதானதடையை நீக்கக்கேட்டார். தடை நீங்கியது.

 

அதன்பின்னர், சோபியா நாவலுக்கு எதிர்நாவல் எழுதினார்.டோல்ஸ்டோய் நாவலில் குறிப்பிட்டதைப்போலவே, வயதுகூடிய ஆணை திருணம் செய்துகொள்ளும்இளம்பெண் ஒருத்தி, தன்வாழ்வில் எதையெல்லாம்தியாகம்செய்கிறாள், எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறாள்என்பதையும் எழுதினார்.

 

Whose Fault? ஏன்ற இந்த நாவல் 2010 ஆம் ஆண்டுதான்ஆங்கிலத்தில் வெளியானது.

 

The Kreutzer Sonata டோல்ஸ்டோயின் தனிப்பட்டஉளக்கொந்தளிப்புக்களை வெளிக்கொண்டுவந்த ஒருபிரதி என்பதற்கு அப்பால், நாவல் ஆழமாக உரையாடுகின்றஇன்னொரு விடயம் பிறிதொரு தரப்பிலிருந்து ஒருநிகழ்வுக்கான நியாயத்தை செவிமடுக்கக்கோருவது. இதுதத்துவார்த்த ரீதியிலும் உளவியல் ரீதியாகவும் நாவலுக்குள்கேட்டபடியிருக்கும் காத்திரமான குரல். வாழ்வின் எல்லாதருணங்களிலும் கடைப்பிடிக்கப்படவேண்டியசமன்பாட்டினை நாவல் முழுவதிலும் கடுமையாகடோல்ஸ்டோய் எதிரொலிக்கிறார். இதனைஅழுத்திச்சொல்வதற்காக, கொலையாளியின்குற்றத்தில்கூட ஒரு நியாயம் இருக்கும், அதனைசெவிமடுக்கவேண்டும் என்ற அந்தத்திற்கு வாசகர்களைஅழைத்துச்செல்கிறார்.

 

The Kreutzer Sonata நாவல் மூலம் இலக்கியத்திற்கு அறம்ஒரு அளவுகோல் அல்ல என்பதை 18 ஆம்நூற்றாண்டிலேயே டோல்ஸ்டோய் அழுத்திச்சொல்லியிருப்பது, நவீன இலக்கியத்தில்அவருக்கான இருப்பு அன்றைக்கேஉறுதிசெய்யப்பட்டுவிட்ட உண்மையைதுலக்கியிருக்கிறது.

 

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page