top of page



நினைவின் எடை
ஐந்து மாத இலங்கைப் பயணத்தை ஒருவாறு நிறைவு செய்துகொண்டு போன வாரம் மெல்பேர்ன் வந்தடைந்தேன். இரு தசாப்தங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் வந்திறங்கியபோது அடர்ந்திருந்த அதே குளிர், என்னை அன்போடு அடையாளம் கண்டு அரவணைத்துக்கொண்டது. விமானத்திற்குள் எனக்குப் பின் ஆசனத்திலிருந்து ஓயாமல் இருமிக்கொண்டிருந்த பக்கி, முன்னே போய்த் தொலையட்டும் என்று சற்று மெதுவாக நடந்தேன்.
4 days ago


நகல் - நிஜம்: மீஹாத்
மீஹாத்தின் "நகல் - நிஜம்" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது. நானும் கருணாகரனும் கிருஷ்ணமூர்த்தியும் சனியன்று பிற்பகல் புறப்பட்டு, ஆறு மாவட்டங்களின் ஊடாகப் பயணம் செய்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னால் சென்று இறங்கும்போது, ஞாயிறு சாமம் ஒரு மணியாகிவிட்டது. எங்களுக்காகக் காத்திருந்த மீஹாத் அக்கரைப்பற்றுப் பெரு வளைவின் கீழ் வந்து வரவேற்று எமக்கான தங்குமிடத்தில் சேர்த்தார்.
Jul 3


மன்னாரில் வீசிய மலையாளக்காற்று
இலங்கைத் தமிழர்களின் பூர்வீக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் அநேகமாக வரலாற்று ரீதியாக - சமய ரீதியாக - பொருளாதார ரீதியாக - அரசியல் ரீதியாக - இயற்கை சார்ந்து தனித்தனியான சிறப்பம்சங்களைக் கொண்டவை. ஆனால், மன்னார் பிரதேசம் கிட்டத்தட்ட மேற்குறிப்பிட்ட அனைத்தும் திரண்டு ஒன்றாக அமையப்பெற்ற பெரு நிலம். ஆனால், அதன் காலநிலை சார்ந்து அல்லது ஏனைய பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிக்கு மீறிய முக்கியத்துவத்தினால் மன்னார் அதிகம் பேசப்படாத பிரதேசம். அல்லது கொண்டாடப்படாத நிலம்.
Jul 1


தசமகா தேவியர்
அண்மையில் தமிழகம் சென்றபோது வாங்கி வந்த சிறு தொகுதி நூல்களில் முக்கியமானது நூல்வனம் பதிப்பாக வெளியாகியுள்ள "தசமகா தேவியர்" என்ற பயண நூல்.
Jun 23


மாயச்சூது - லதா அருணாச்சலம்
தெய்வீகனின் சிறுகதைத் தொகுப்பு - நூல்வனம் வெளியீடான - “மாயச்சூது” வாசித்து முடித்தேன். முதலில் கவனத்தில் பட்ட விஷயம், இத்தொகுப்பு அளவில் மிகச் சிறியது, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான வாசிப்பு நேரமே கோரும் நூல். கெட்டி அட்டையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகான நூல் இது. தெய்வீகனின் வழக்கமான தேர்ந்த தமிழ்ச் சொல்லாடல்கள் கொண்ட முன்னுரையுடன் தொடங்கும் இந்நூல், அவரது புனைவுப் பயணத்தின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்த்துகள் . தொகுப்பின் முதல் கதையான ‘அவனை எனக்குத் தெரியும்’
Jan 30


மாயச்சூது - கண்மணி
தெய்வீகனின் 7 சிறுகதைகளை நேர்த்தியான கெட்டி அட்டைக்குள் தொகுத்து, கையிலடங்கும் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்- நூல்வனம் பதிப்பகத்தார். அரசாங்கங்களின் மாயச் சூதான போர்களின் விளைவாக வேற்று தேசங்களில் அடையாளமிழந்து, அமைதியிழந்து தவித்திடும் மனிதர்களின் தனிமையும் வெறுமையும் அச்சமும் தெய்வீகனின் கதைகளில் பிளந்து வைக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பில் என்னை ஈர்த்த கதை - “எட்டாவது திரை” இதில் எழுத்தாளர், இருளையும் ஒளியையும் இரவையும் பகலையும் திருப்பிப்போட்டு விளையாடியிருக்கிறார். சற்ற
Jan 28


ஒளிவளர் பயணம்
சமகாலத்தில் அன்றாடம் என்பது நாங்கள் திரை நேரங்களில் செலவிடுகின்ற நீள் கணங்கள் தின்றதுபோக, கைகளில் கிடைக்கின்ற வாழ்க்கையின் அதிஷ்டம் மிக்க பெறுமானமே. இந்த மிகுதிகளில் எங்களை ஆட்கொள்கின்ற காட்சிகள் - எழுத்துக்கள் - உரையாடல்கள் என அனைத்தும் எங்களை இயல்புக்கும் பாவனைக்கும் இடையில் நுட்பமாக விசாரணை செய்கின்றன. உள்ளத்தையும் அதில் உறங்கும் உண்மையையும் பல விதமாக எடைபோடுகின்றன. எமக்குள் செயற்கையான உலகங்களை உருவாக்க எத்தனிக்கின்றன. ஒவ்வாமைகளில் ஒட்டப்பார்க்கின்றன. பசிய வாழ்வொன்றை வாழ்வ
Jan 28


மானிப்பாய் வெள்ளம்
இலங்கை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கினாலும் மானிப்பாய் தன்னந்தனியாக எந்தப் பாதிப்பும் இல்லாமல் மருதடிப்பிள்ளையார் கோவிலை மையமாகக்கொண்டு மிதக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனெனில், மானிப்பாயிற்கு வெள்ளம் வந்து நான் ஒருபோதும் கண்டதில்லை. சுதுமலை அம்மன் கோவில்பக்கம்தான் வயல்கரையோரமிருக்கிற கோயில் வழக்கம்போல முடி தெரியிற வரைக்கும் மூழ்கும், வெள்ளம் ஓரளவுக்கு இறங்கியபிறகு ஹீல்ஸ் போட்ட ஹிந்தி நடிகைபோல ஐயர் சேற்றுக்குள்ளால நடந்துபோய் பூசை செய்துவிட்டு வருவார். மான
Dec 19, 2025


Grafton: Its a Purple Paradise
நியூ சவுத் வேல்ஸ் - குவீன்ஸ்லாந்து மாநில எல்லைக் கிராமமான கிராப்டனில் ஆண்டுதோறும் நவம்பரில் நடைபெறும் ஜக்கரண்டா மலர்த் திருவிழாவுக்கு (Grafton Jacaranda Festival) சென்றுவரவேண்டும் என்ற திட்டம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஆனால், இந்த வருடம் இனிதே நிறைவேறியது. மெல்பேர்னிலிருந்து சிட்னிக்கு 880 கிலோ மீற்றர்கள் சென்று பின்னர், அங்கிருந்து 620 கிலோ மீற்றர்கள் அமத்தினால், இலகுவாகப் போய் இறங்கிவிடக்கூடிய 'குறுகிய' பயணம்தான். எதற்காக Grafton போகவேண்டும் என்று க
Nov 11, 2025


வன்மம் - வன்முறை - வரம்
ஒரு புனைவெழுத்தாளன் தன்னை மொழிபெயர்ப்புக்குப் பலிகொடுப்பது என்பது இலக்கியத்தில் இடம்பெறுகின்ற உயர்ந்த தியாகங்களில் ஒன்று. மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்பாளனின் நேரத்தையும் சுயபுனைவிற்கான சிந்தனையையும் சுவீகரிப்பது மாத்திரமல்ல, அவனுக்குள் நிறைந்திருக்கும் புனைவு மொழியையும் கிட்டத்தட்ட உறிஞ்சிவிடுகிறது. கார்த்திகைப் பாண்டியன் இந்த இழப்பினை, பெரும் அர்ப்பணிப்பாக - பல்வேறு அரிய நூல்களை தமிழுக்குக் கொண்டுவருவதன் மூலம் - பெரும்பணியாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தூழியன். "ஒரு சாகசக்காரன
Jul 13, 2024
bottom of page