
சமீபத்திய வெளியீடுகள்

சிறுகதை தொகுப்பு
திருவேட்கை
"ஒரு தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது சில சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் நமது மனதில் ஆழமாகப் பதியவேண்டும். அத்தோடு வாழ்க்கை குறித்த நாம் அறிந்த முரண்களிலிருந்தும் புரிதல்களிலிருந்தும் இதுவரையில்லாத புதியனவற்றை நாம் தெரிந்திருக்க வேண்டும். அப்படி பார்க்கையில் இவை எல்லாமே இந்தத் தொகுப்பின் வழியாய் நமக்குக் கிடைக்கிறது"
- லக்ஷ்மி சரவணகுமார்

சிறுகதை தொகுப்பு
உன் கடவுளிடம் போ
"இந்தத் தொகுப்பை ஒரு மெய்யுறு புனைவு என்று சொல்லலாம். ஓர் உண்மைச் சம்பவம் அல்லது சரித்திர நிகழ்வை ஆதாரமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதைகள். வாழ்வின் புதிர்கள், நெருக்கடிகள், அறியாத பக்கங்கள் ஆகியவற்றை தொட்டுச் செல்லும் கதைகள். ஆச்சரியங்களோ, புதிய தகவல்களோ, சிந்திப்பதை தூண்டுவதற்கான உந்துதல்களோ இல்லாத ஒரு சிறுகதையைகூட இந்த தொகுப்பில் காணமுடியாது. அதனாலேயே இது அதிக கவனப் பெறுமானம் கொள்கிறது"
- அ.முத்துலிங்கம்

ஆபுனைவு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
"நாடற்றவர்களின் கடவுச்சீட்டு" புலம்பெயர் இலக்கியத்தின் இன்னொரு பாய்ச்சல் என்றே குறிப்பிடலாம். அகதிகளின் வலியறிந்த நாம், உலக அகதிகளின் குரலாகவும் எதிரொலித்து மானிடத்தை கேள்விக்கு உள்ளாக்கும் கடமையையும் செய்யத்தவறவில்லை என்பதற்கு இன்னும் ஒரு சாட்சியம் "நாடற்றவர்களின் கடவுச்சீட்டு". இது ஒரு 'மூத்த அகதி'யின் வாக்குமூலம்"
- வாசு முருகவேல்

சிறுகதை தொகுப்பு
அமீலா
"ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. பலர் நகைச்சுவையை கையை முறுக்கி, தரதரவென்று இழுத்து அழவைத்துக் கூட்டி வருகையில் தெய்வீகனிடம் நகைச்சுவை இயல்பாக வருகிறது. நகைச்சுவை மட்டுமல்ல, கதைசொல்லலிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பை முன்வைக்கும் தொகுப்பு இது"
- சரவணன் மாணிக்கவாசகம்

ஆபுனைவு
தாமரைக்குள ஞாபகங்கள்
"நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விடயங்களிலும் உலகுக்கு சொல்வதற்கு ஏதோ ஒன்று எப்பொழுதுமே இருக்கத்தான் செய்கிறது. அதை எப்படி உலகுக்கு ரசிக்கும்படி சொல்கிறோம் என்பதில் தான் அதன் வெற்றி இருக்கிறது. அந்தத் திறன் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு திறன் வாய்க்கப்பெற்ற எழுத்தாளர் தான் இந்த நூலின் ஆசிரியர் தெய்வீகனும். தன் ஞாபக அடுக்குகளில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளுக்கு எழுத்தில் உயிர் கொடுக்கும் முயற்சியே அவரது 'தாமரைக்குள ஞாபகங்கள்' என்ற இந்தப் புத்தகம்"
- துளசி