top of page



நகல் - நிஜம்: மீஹாத்
மீஹாத்தின் "நகல் - நிஜம்" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது. நானும் கருணாகரனும் கிருஷ்ணமூர்த்தியும் சனியன்று பிற்பகல் புறப்பட்டு, ஆறு மாவட்டங்களின் ஊடாகப் பயணம் செய்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னால் சென்று இறங்கும்போது, ஞாயிறு சாமம் ஒரு மணியாகிவிட்டது. எங்களுக்காகக் காத்திருந்த மீஹாத் அக்கரைப்பற்றுப் பெரு வளைவின் கீழ் வந்து வரவேற்று எமக்கான தங்குமிடத்தில் சேர்த்தார்.
Jul 3


மன்னாரில் வீசிய மலையாளக்காற்று
இலங்கைத் தமிழர்களின் பூர்வீக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் அநேகமாக வரலாற்று ரீதியாக - சமய ரீதியாக - பொருளாதார ரீதியாக - அரசியல் ரீதியாக - இயற்கை சார்ந்து தனித்தனியான சிறப்பம்சங்களைக் கொண்டவை. ஆனால், மன்னார் பிரதேசம் கிட்டத்தட்ட மேற்குறிப்பிட்ட அனைத்தும் திரண்டு ஒன்றாக அமையப்பெற்ற பெரு நிலம். ஆனால், அதன் காலநிலை சார்ந்து அல்லது ஏனைய பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிக்கு மீறிய முக்கியத்துவத்தினால் மன்னார் அதிகம் பேசப்படாத பிரதேசம். அல்லது கொண்டாடப்படாத நிலம்.
Jul 1


Grafton: Its a Purple Paradise
நியூ சவுத் வேல்ஸ் - குவீன்ஸ்லாந்து மாநில எல்லைக் கிராமமான கிராப்டனில் ஆண்டுதோறும் நவம்பரில் நடைபெறும் ஜக்கரண்டா மலர்த் திருவிழாவுக்கு (Grafton Jacaranda Festival) சென்றுவரவேண்டும் என்ற திட்டம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஆனால், இந்த வருடம் இனிதே நிறைவேறியது. மெல்பேர்னிலிருந்து சிட்னிக்கு 880 கிலோ மீற்றர்கள் சென்று பின்னர், அங்கிருந்து 620 கிலோ மீற்றர்கள் அமத்தினால், இலகுவாகப் போய் இறங்கிவிடக்கூடிய 'குறுகிய' பயணம்தான். எதற்காக Grafton போகவேண்டும் என்று க
Nov 11, 2025
bottom of page